ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 66. பாலை

ADVERTISEMENTS

மிளகு பெய்தனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன்
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி,
புன் புறா உயவும் வெந் துகள் இயவின்,
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்,
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல்லோ-
கோதை மயங்கினும், குறுந் தொடி நெகிழினும்,
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்,
மாண் நலம் கையறக் கலுழும் என்
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே?
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


மிளகினை யிட்டுவைத்தாற் போன்ற சுவையுடைய காய்ந்த கிளைகளையுடைய உகாய் மரத்தினுள்ள புல்லிய காயை; சிதர் சிதர்த்து உண்ட புலம்பு கொள் புன் புறா வண்டுகள் நெருங்காதபடி போக்கி உண்டதனாலாகிய வருத்தமிக்க புல்லிய புறா; நெடிய கிளை மேலேறித் தான் தின்ற தவற்றைக் கருதி வரைகள் விளங்கிய தன் பிடரி சிலிர்த்துத் தின்ற வெறிப்பினால் மறுக்கமுற்று வருந்தாநிற்கும்; வெப்பங்கொண்ட புழுதிமிக்க நெறியின் கண்ணே தன்னை விரும்பிய காதலனைக் கூடிச் சென்றனளாயினும்; சூடிய பூமாலை சிக்குண்டாலும் குறிய வளை கையினின்று நழுவினாலும் காஞ்சியணிந்த அல்குலின் மேல் நாலுகின்ற பொற்காசு இனம் முறை பிறழ்ந்து கிடந்தாலும்; அவற்றைத் திருத்துதற்குத் தெரிந்திலளாய்த் தனது மாட்சிமைப்பட்ட அழகானது அழிந்தொழியுமாறு கலுழாநிற்கும் என் அழகிய இளம் புதல்வியின் மலர்போன்ற கண்கள்; வெய்ய சுரத்திற் செல்லுங் கடுமையாலே சிவந்து ஒளி மழுங்கி¢க் கலக்க மடைந்தனவோ ? இவ்வொன்றற்கே வருந்தா நிற்பேன்;

மனை மருட்சி.

இனிசந்த நாகனார்