ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 178. நெய்தல்

ADVERTISEMENTS

ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன
தோடு அமை தூவித் தடந் தாள் நாரை
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது,
கைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும்
தண்ணம் துறைவன் தேரே கண்ணின்
காணவும் இயைந்தன்று மன்னே; நாணி
நள்ளென் யாமத்தும் கண் படை பெறேஎன்;
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப,
விளிந்தன்றுமாது, அவர்த் தௌந்த என் நெஞ்சே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


அசைகின்ற மூங்கிலினுள்ளே உரிக்கப்படும் உரியை மடித்து மெல்லிதாகப் பிசைந்துவைத்தாலொத்த; தொகுதியமைந்த சிறகுகளையும் நீண்ட கால்களையும் உடைய நாரையினால்; இன்பம் நுகரப் பெற்ற செயலற்ற பேடை; கழிக்கரையிலே பெயருமிடங்களில் பெயர்ந்து சென்று சிறிய மீனையும் உண்ணாது, கைதை படுசினைப் புலம்பொடு வதியும் தண்ணம் துறைவன் தாழையின் பெரிய கிளையின்கண்ணே வருத்தத்துடன் உறையாநிற்கும் மெல்லிய துறைகளையுடைய நம் காதலன்; ஊர்ந்துவரும் தேரானது முன்பு நம்முடைய கண்ணாலேனும் காணுதற்குப் பொருந்தியிருந்தது, இப்பொழுது அது கழிந்தது; ஏதில் மாதரார் ¢கூறுஞ் சிறு சொல்லை நம்பி நம் அன்னை இற்செறித்தலானே நாணமுற்று இரவு நடுயாமத்திலும் கண் துயில்கொளப் பெற்றிலேன்; அயலிலே பறவைகள் ஒலித்தல் அவர் தேரின் மணியொலிபோலிருத்தலால்; அவ்வொலியைக் கேட்டு முன்பு மிகத் தௌ¤ந்திருந்த பெருமையுடைய என்னெஞ்சமானது; இப்பொழுது அழிவு பொருந்தியதாயிற்று;

சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.