ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 37. பாலை

ADVERTISEMENTS

பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை,
உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தௌ மணி
பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று
இவளொடும் செலினோ நன்றே; குவளை
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ,
கலை ஒழி பிணையின் கலங்கி, மாறி
அன்பிலிர் அகறிர் ஆயின், என் பரம்
ஆகுவது அன்று, இவள் அவலம்- நாகத்து
அணங்குடை அருந் தலை உடலி, வலன் ஏர்பு,
ஆர்கலி நல் ஏறு திரிதரும்
கார் செய் மாலை வரூஉம் போழ்தே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


ஒன்றோடொன்று சிக்குண்ட சிறுதூறுகளும் பழைமையான நல்ல தோற்றமும் வாடிய அகன்ற இடத்தையுடைய; உணவின்றி வாட்டமுற்ற நிரையிலுள்ள ஓராவினது தௌ¤ந்த மணியோசை மெல்லென வந்து ஒலியாநிற்கும் அத்தத்தில்; நீயிர் பொருள் நசையாற் செல்லுகின்ற இப்பொழுது கூரிய பற்களையுடைய இவளோடுஞ் செல்வீராயின் அது மிக நல்லதொரு காரியமாகும்; அங்ஙனமின்றிக் கலைமானைப் பிரிந்த பெண் மான் போல இவள் கலக்க முற்றுக் குவளையின் நீர் நிரம்பிய கரிய மலர்போன்ற கண்களில் அழுகின்ற நீர்வடிய; மாறுபட்டு அன்பில்லாதீராய் நீயிர் இவளைப் பிரிந்து செல்லுவீராயின்; பாம்பினது வருத்துகின்ற அரிய தலை துணிந்து விழும்படி சினந்து; வலமாக எழுந்து மிக்க முழக்கத்தையுடைய நல்ல இடியேறு குமுறித் திரியாநின்ற முகில் சூழ்ந்துலாவுங் கார்ப்பருவத்து மாலைக் காலம் வரும்பொழுது இவள் அவலம் என்பரம் ஆகுவது அன்று இவள் படுகின்ற அவலம் என்னாலே தாங்கப்படுவ தொன்றன்று காண்மின்;

வரைவிடை வைத்துப்பிரிவின்கண் தோழி
சொல்லியது.

பேரி சாத்தனார்