ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 263. நெய்தல்

ADVERTISEMENTS

பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்
இறை வரை நில்லா வளையும், மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு
உரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு,
கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது,
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு,
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்
மெல்லம் புலம்பற் கண்டு, நிலைசெல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு,
உரைத்த- தோழி!- உண்கண் நீரே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


தோழீ! பிறைபோன்ற அழகெல்லாம் இழந்த நினது நெற்றியையும் முன்கையளவினில்லாது கழலும் வளையையும்; மறைந்தேனுங் கூறாது நேராக வந்து ஊரார் அலர் தூற்றும் பழிச்சொல்லையும்; சொல்லவேண்டிய நங்காதலனுக்கு நாம் நாணமேலீட்டினால் சொல்லாதொழிந்தோ மெனினும்; இரையை விரும்பி நிறைந்த சூலுடைமையின் இயங்கமாட்டா வருத்தத்தினாலே நெய்தனிலத்தின்கண்ணதாகிய கழியை அடையாமல் மருதநிலத்தின்கண்ணதாகிய கழனியிலே தங்கியிருந்த வளைந்த வாயையுடைய பேடைநாரைக்கு, முடம் முதி¢ர் நாரை கடல் மீன் ஒய்யும் முடம் முதிர்ந்த நாரைப் போத்துக் கடலின் மீனைக் கொண்டுபோய்க் கொடாநிற்கும்; மெல்லிய கடற்கரைத் தலைவனைக் கண்டு; பலகால் நாம் மறைக்கவும் மறைக்கவும் நிலைகொள்ளாமல் அளவு கடந்து; மையுண்ட நம்முடைய கண்களின் நீரே வெளிவந்து உரை செய்துவிட்டன; யாம் யாது செய்யவல்லேம்!




சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு
கடாயது.

இளவெயினனார்