ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 130. நெய்தல்

ADVERTISEMENTS

வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப,
கோலின் எறிந்து காலைத் தோன்றிய
செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ?
எனை விருப்புடையர் ஆயினும், நினைவிலர்;
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி, நீடாது,
'எவன் செய்தனள், இப் பேர் அஞர் உறுவி?' என்று
ஒரு நாள் கூறின்றுமிலரே; விரிநீர்
வையக வரையளவு இறந்த,
எவ்வ நோய்; பிறிது உயவுத் துணை இன்றே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


தோழீ ! தௌ¤ந்த ஓசையையுடைய இடமகன்ற தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமை இடையில் ஒலிப்ப; குற்றமின்றி எல்லா இலக்கணமும் நிறைந்த குதிரைகள் பூட்டிய தேரைக் கோலாலெறிந்து செலுத்தி; விடியற்காலையிலே புறத்தே தோன்றிச் சென்ற செம்மையாகிய நீர்மையையும் பொதுவாகிய செயலையும் உடைய நம் காதலர்; பழைமையாகிய இவ்வூரின்கண்ணே தமதாகச் செய்யப்படுகின்ற இல்வாழ்க்கையினுங்காட்டில் இனியதொரு பொருளும் உண்டோ? அதனை அறியாராய் வேறொரு பொருளுண்டென அகன்று விட்டனர்; எவ்வளவு விருப்புடையவராயினும்; இப்பொழுது எம்மை நினையாதவராயினர்; அன்றியும் அவருக்கு உடன்பட்ட என்னெஞ்சும் நெகிழ்ச்சியுற்ற தோளும் வாடிய எனது நிறமும் பார்த்து; பாணித்தலின்றி இப் பெரிய துன்பம் உற்றவள் என்ன காரியம் செய்து கொண்டனளோ? என்று ஒரு நாளேனும் கூறினாரிலர்; யானடைந்த துன்ப நோயோ விரிந்த கடல் நீர் சூழ்ந்த நிலத்தின் எல்லையளவையும் கடந்தன; இனி உசாவுந் துணை வேறியாதுமில்லை; இனி எவ்வண்ணம் உய்வேன்?

பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை எதிரழிந்து
சொல்லியது.

நெய்தல்தத்தனார்