ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 50. மருதம்

ADVERTISEMENTS

அறியாமையின், அன்னை! அஞ்சி,
குழையன் கோதையன் குறும் பைந் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல,
நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடை
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்,
'கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று' என,
'யாணது பசலை' என்றனன்; அதன் எதிர்,
'நாண் இலை, எலுவ!' என்று வந்திசினே-
செறுநரும் விழையும் செம்மலோன் என,
நறு நுதல் அரிவை! போற்றேன்,
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


அன்னாய் ! நறிய நுதலையுடைய தலைவி ! என் அறியாமையாலே நின்னை அஞ்சி; குழை பெய்து மாலைசூடிக் குறிய பசிய தொடியணிந்தவனாகி விழாக் களத்து அவன் துணங்கையாடுதலைக் கையகப்படுப்பேமாகி யாங்கள் செல்லா நிற்கையில், நொதுமலாளன் நெடு நிமிர் தெருவின் கைபுகு கொடு மிடை கதுமெனத் தாக்கலின் நமக்கு அயலானாகிய அவன்தான் அவ்வணிகளையுடையனாய் நெடிய நிமிர்ந்த தெருமுடிந்த வேறொரு வழி வந்து புகுந்த வளைந்த விடத்தே விரைவின் வந்து எதிர்ப்பட்டானாக; இங்ஙனம் செய்யும் நின்னைக் கேட்பார் உண்டோ? இல்லையோ? அறிந்துகொள் என்று யான் கூற; அவனும் அவ்வறியாமையுடையான் போல என்கட்பசலை அழகுடையது என்றனன்; அதனுக் கெதிர்மொழி கொடுத்தற்காக அவன் பகைவராலும் விரும்பப்படும் செம்மாப்புடையான் எனக் கொண்டு; வணங்கிச் செல்லாது, சிறுமை பெருமையின் என் சிறுமை பெரிதாகலான்; ஆராயாதே துணிந்து 'எலுவ நீ நாணுடையை அல்லை" என்று கூறிவந்தேன்;

தோழி பாணற்கு வாயில்மறுத்தது.

மருதம் பாடிய
இளங்கடுங்கோ