ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 294. குறிஞ்சி

ADVERTISEMENTS

தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு,
நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ;
மாயம் அன்று- தோழி!- வேய் பயின்று,
எருவை நீடிய பெரு வரைஅகம்தொறும்,
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைக் கோடு கண்டன்ன,
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழும் சாரல்
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே!
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


தோழீ! மூங்கில் நெருங்கிக் கொறுக்கச்சி முளைத்துப் பரவிய மலையிடமெல்லாம்; பழைமையாயுற்ற அறிவுடனே வலிமையும் மிகுதலாலே சினங்கொண்டு புலியைக் கொன்ற யானையின் தந்தத்தைக் கண்டாற்போன்ற; செவ்விய புறத்தையுடைய கொழுவிய அரும்பவிழ்ந்த காந்தள்; சிலம்பிடம்¢ எல்லாம் மணங்கமழும் சாரலையுடைய இலங்குகின்ற மலைநாடனது; அகன்ற மார்பானது; ஆற்றற்கரிய தீயையும் ஆற்றுதற்கினிய காற்றையும் ஆகாயந்தான் பெற்றது போலக் களவுக்காலத்து அணித்தாகி எப்பொழுதும் இல்லாமையால்; நோய் செய்யும் தன்மையும்; இப்பொழுது வரைந்து கொண்டு களவுக் கை நெகிழாது அணைத்து முயங்கியிருத்தலானே இன்பமாந் தன்மையுமாகி யிராநின்றது; இது பொய்ம்மை யெனப் படுவதன்று; மெய்ம்மையே யாகும்;




மணமனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு
சொல்லியது.

புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்