ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 46. பாலை

ADVERTISEMENTS

வைகல்தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து;
காணீர் என்றலோ அரிதே; அது நனி
பேணீர் ஆகுவிர்- ஐய! என் தோழி
பூண் அணி ஆகம் புலம்ப, பாணர்
அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி,
பறை அறை கடிப்பின், அறை அறையாத் துயல்வர,
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து,
எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து,
நன் வாய் அல்லா வாழ்க்கை
மன்னாப் பொருட் பிணிப் பிரிதும் யாம் எனவே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


ஐயனே ! என் தோழியின் கலன்களணிந்த மார்பகம் தனியே கிடந்து வருந்தாநிற்ப கொன்றை அம தீம்கனி பாணர் அயிர்ப்புக் கொண்டு அன்ன பறை அறை கடிப்பின அறை அறையாத் துயல்வரகொன்றையின் இனிய சுவையையுடைய கனிகள் பாணர் ஐயங் கொள்ளும் படியவாய் அவர் தமது பறையை முழக்குங் குறுந்தடி போலப் பாறையில் விழுமாறு கிளைகள் மிகவும் துவண்டாட வெவ்வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து எவ்வம் மிகூஉம் அருஞ்சுரம் இறந்துகொடிய காற்று வீசாநின்ற மூங்கில் மிக்க இடத்தையுடைய துன்பமிக்குள்ள செல்லுதற்கரிய சுரத்திற்போய்; நன்மை வாய்த்தலில்லாத வாழ்விற்குரிய நிலையற்ற பொருளீட்டுதலிற் பிணித்தவுள்ளத்தோடு 'யாம பிரிதும்' என்று நீயிர் கூறுதலானே; இவ்வுலகத்து நாள்தோறும் வில்லினின்று எய்யப்படும் கணை சென்று குறியிலே தைக்கப்படு மளவையின் அக்கணை செல்லும் நிழல் எவ்வண்ணம் விரைவிற் சென்று அழியுமோ அவ்வண்ணம் இன்பமும் இளமையும் கழியாநிற்கும், அவற்றைக் கண்டிலீரோ என்றல் அரிதேயாகும், அவை யாவர்க்கும் தெரிந்திருத்தலாலே; ஆதலின் அந் நிலையாமை யொன்றனையே விரும்பி ஆராய்ந்து அவ்வின்பமும் இளமையுங் கழியுந் துணை இவளைப் பிரியீராய் உறைவீராக !;

பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி
சொல்லியது.