ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 65. குறிஞ்சி

ADVERTISEMENTS

அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!-
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக்
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ,
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து,
புலியொடு பொருத புண் கூர் யானை
நற் கோடு நயந்த அன்பு இல் கானவர்
விற் சுழிப்பட்ட நாமப் பூசல்
உருமிடைக் கடி இடி கரையும்
பெரு மலை நாடனை 'வரூஉம்' என்றோளே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


விட்டு விட்டுக் கரைத்துச் செல்லுதலையுடைய கான்யாற்றின்கண்ணே கலங்கும் பாசியை நீர் அலைத்தலானே அவை யாண்டும் கலப்ப; விளங்கிய வெள்ளிய அருவியினது ஒள்ளிய துறையின் கண்ணே பாய்ந்து; புலியுடனே போர்செய்தலானாகிய புண்மிக்க யானையின் நல்ல தந்தத்தை விரும்பிய அன்பற்ற வேடரின்; வில்லினின்றுவிடும் அம்புபட்டதனாலாகிய சுழன்ற அச்சத்தைத் தருகின்ற பிளிற்றலின் பேரொலியானது இடியிலுண்டாகு மிக்க முழக்கத்தைப் போல ஒலிக்கும்; பெரிய மலை நாடன் குறித்த பருவத்து வாராமையால் அவனை நாம் கருதியிருக்கும்பொழுது நம் அயல் வீட்டு மாதொருத்தி வேறொருத்தியிடம் உரையாடுகின்றவள் நமக்கு நன்னிமித்தமாகக் கிடங்கில் என்னும் ஊர் போன்ற சிறந்த இனிய சொல்லால் 'அவன் இன்னே வருகுவன்' எனக் கூறினள் காண்; அவ்வார்த்தை அசரீரியெனப் படுதலால் நம்மலை நாடன் இன்னே வரும் என யான் கருதுகின்றேன் நீ வருந்தாதேகொள் !; இங்ஙனம் நமக்கு நன்னிமித்தமாகக் கூறிய அவ் வயல்வீட்டு மாது தேவருணவாகிய அமுதத்தினை ஈண்டுக் கைவரப் பெற்று இப்பொழுதே உண்பாளாக !;

விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைமகட்குச்
சொல்லியது.

கபிலர்