ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 363. நெய்தல்

ADVERTISEMENTS

'கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்
தெண் கடல் நாட்டுச் செல்வென் யான்' என
வியம் கொண்டு ஏகினைஆயின், எனையதூஉம்
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு
வம்மோ- தோழி!- மலி நீர்ச் சேர்ப்ப-
பைந் தழை சிதைய, கோதை வாட,
நன்னர் மாலை, நெருநை, நின்னொடு
சில விளங்கு எல் வளை ஞெகிழ,
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


நிரம்பிய கடல் நீர் பரவிய நெய்தனிலத் தலைவனே!; உடுத்திருந்த பசிய தழையுடை சிதைய மலர்மாலை வாடச் சிலவாகிய விளங்கிய ஒளி பொருந்திய வளைகள் கழல; நன்றாக நேற்று மாலைப்பொழுது நின்னொடு அலவனைப் பிடித்தாட்டிய என் தோழியினுடைய; சிலம்பு உடைபட்டதனாலே; கண்டல் மரங்களை வேலியாகவுடைய புறத்தே கழி சூழ்ந்த கொல்லைகளையுடைய தௌ¤ந்த நல்ல கடல் நாட்டுத் தலைவன் யானென; நெறிகொண்டு போயினையாயின்; எத்துணையளவேனும் தான் செய்யும் மிக்க கம்மத் தொழிலில் வருத்தமுறாத கெடுதலில்லாத கம்மியன்; கலன் பொறியற்றுப் போயின் இணைத்துச் சந்து ஊதிக் கூட்டுதற்கு மண் கட்டவேண்டியதன்றே; அங்ஙனம் கட்டுதற்குத் துறையிலுள்ள மணலைக் கொண்டுவந்து தந்து செல்வாயாக!




பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி,
'தலைமகளை என்னை ஆற்றுவிக்குமென்று ஆகாதோ எம்பெருமான் கவலாது
செல்வது? யான் ஆற்றுவிக்குமிடத்துக் கவன்றால் நீ ஆற்றுவி' எனச்
சொல்லியது; கையுறை நேர்ந்த தோழி தலைமகட்குக் கையுறை உரைத்தது