ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 40. மருதம்

ADVERTISEMENTS

நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட,
குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர்,
பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார்,
திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப,
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப்
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈர்- இமை பொருந்த,
நள்ளென் கங்குல், கள்வன் போல,
அகன் துறை ஊரனும் வந்தனன்-
சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


காவலையுடைய மாளிகையிடத்து நெடிய நாவையுடைய ஒள்ளிய மணி ஒலியா நிற்ப ஒலிக்கின்ற தெங்கங் கீற்றான் மிடைந்து புனைந்த மணல் பரப்பிய பந்தரின்கண்ணே; முன்பு பரத்தையிற் சென்ற வழி¢ப் பெரிய பாணர் தலைவனைச் சூழ்ந்து காவலை மேற்கொண்டாற் போலத் திருந்திய கலனணிந்த மகளிர் இப்பொழுது நன்னிமித்தமாக நிற்ப; நறுமணமிக்க விரிப்பு விரித்த மெல்லிய அணையின்மீது செவிலியுடனே ஈன்ற அணுமை விளங்கிய புதல்வன் துயிலா நிற்ப; வெண்கடுகை யப்பிய எண்ணெய் தேய்த்து ஆடும் நீராட்டினால் ஈரிய அணியையுடைய குளிர்ந்த நெய்பூசிய மிக்க மென்மையாகிய உடம்பினையுடைய அழகு விளங்கிய மனைவிதான்; தன் ஈரிமையும் ஒன்றோடொன்று பொருந்த வுறங்கா நிற்ப; அகன்ற நீர்த்துறையையுடைய வூரனும் சிறந்த தந்தையின்பெயரனாகிய தன் மைந்தன் பிறந்ததனால் இடையாமத் திருளிலே கள்வனைப் போல வந்துற்றான்;

தலைமகட்குப் பாங்கு ஆயினார் கேட்பப் பரத்தை
சொல்லியது.

கோண்மா நெடுங்கோட்டனார்