ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 109. பாலை

ADVERTISEMENTS

'ஒன்றுதும்' என்ற தொன்று படு நட்பின்
காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று,
'அன்னவோ, இந் நன்னுதல் நிலை?' என,
வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி
உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்,
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து,
உச்சிக் கட்டிய கூழை ஆவின்
நிலை என, ஒருவேன் ஆகி
உலமர, கழியும், இப் பகல் மடி பொழுதே!
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


'நின்னைப் பிரியேமாகி எப்பொழுதும் ஒன்றியிருத்¢தும்' என்று கூறிய பழைமையாகிய நட்பினின்றும் காதலர் பிரிந்தகன்றதனாலே கலங்கி மயங்குற்று; இந்நல்ல நுதலையுடையாளுடைய நிலைமை அப்படிப்பட்டனவோ? என்று வினாவுதல் ஒழியாத அலங்கரித்த அணிகலனையுடையாய் யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக! இனி உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென இப்பொழுது கூறுதற்கியலாத துன்பம் விரைந்துபற்ற; ஒலிக்கும் வாடை வீசுதலையுடைய ஆதித்த மண்டிலம் மேற்கே மறைகின்ற இம் மாலைகாலமானது; இருண் மிக்க இராப்பொழுதிலே சேற்றையுடைய தொழுவத்தினின்று வேற்றிடத்திலே கட்டவேண்டு மற்றத்து அங்ஙனஞ் செய்யாது அத்தொழுவத்துள் கீழினும் படுக்கவிடாது நின்ற நிலையிலே நிற்குமாறு தலைக்கயிற்றை யிழுத்து உச்சியிலே தூக்கி மேற்கை மரத்தில் இறுகப்பிணித்த குறுமையாகிய பசுவினது நிலைமையைப் போல; யான் ஒருத்தியாகியே நின்று உள்ளஞ் சுழன்று வருந்தும் வண்ணம் மெல்ல மெல்ல நீங்கா நிற்கும்; இவ்வேளை யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேனென்று புலம்புவ தன்றி வேறில்லைக்காண்;

பிரிவிடை ஆற்றாளாய தலைமளது நிலைகண்ட
தோழிக்குத் தலைமகள்சொல்லியது.

மீளிப் பெரும்பதுமனார்