ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 36. குறிஞ்சி

ADVERTISEMENTS

குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை,
பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி,
தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம்
கல்லக வெற்பன் சொல்லின் தேறி,
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து,
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி,
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து,
ஆனாக் கௌவைத்துஆக,
தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே?
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


குறிய முன்னங்காலையுடைய கொல்லவல்ல பெரிய ஆண்புலி; பொலிவுபெற்ற நெற்றியையுடைய கரிய பிடியானை புலம்புமாறு நீரற்ற அகன்ற காட்டினிடத்துப் பெரிய களிற்று யானையைத் தாக்கி¢க் கொல்லா நிற்கும் மலையிடத்தையுடைய சிலம்பன்; 'நின்னிற் பிரியேன்' என்று கூறிய பொய்ம்மொழியை மெய்யெனத் தௌ¤ந்து; யாம் எம் நலத்தை இழந்தேவிட்டேம், ஆதலின் இந்நடுயாமத்துக் கண் துயிலாதொழிந்தனம்; பழிதூற்றும் வாயையுடைய ஏதிலாட்டியராற் கூறப்படும் அம்பலொடு சேர ஒலிமிக்க இவ்வூர்; மேன்மையில்லாத தீய சொற்களைக் கூறுதற்கு வேண்டிய உரைகளை ஏறட் டெடுத்துக்கொண்டு அமையாத பழி மொழிமையுடையதாக எம்மைப்போல் எதனை இழந்தது? இந் நடுயாமத்திலும் துயின்றிலதே;

இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.


சீத்தலைச்சாத்தனார்