ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 290. மருதம்

ADVERTISEMENTS

வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்
கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே!
நீயே பெரு நலத்தையே; அவனே,
'நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு' என மொழிப; 'மகன்' என்னாரே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


முட்போன்ற கூரிய பற்களையுடையோய்!; வயலில் மள்ளர் அறுக்கும் கதிரோடு அறுபட்டு அரிச் சூட்டொடு களத்திற் கொணர்ந்து போடப்பட்ட வெளிய ஆம்பலின் அப்பொமுது மலர்ந்த புதிய பூ, கன்றை அணிமையில் ஈன்றுடைய பசுவானது தின்று எஞ்சிய மிச்சிலை; உழுது விட்ட ஓய்ந்த நடையையுடைய பகடு தின்னா நிற்கும் ஊரனுடன்; கூட்டம் நெடுங்காலம் நிகழ்த்துதலை நீ விரும்பினையாதலின் 'அவள் அவனோடு கட்டில் வரை யெய்தினாள்' என்று ஊரார் கூறுகின்ற சொல்லைக்கொண்டு என்னைப்போல வேறுபட்டுக் கொள்ளாதே. இனி என் வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ?; விருப்பமாயின் யான் கூறுகின்றதனைக் கொள்வாயாக!; அதுதான் யாதோவெனில் பெரிய இளைமையும் தகுதிப்பாடும் உடையையாதலால் நீ வேறுபட்டுக் கொள்வது நின் இளமைக்கும் எழிலுக்கும் ஏலாதது காண்; அவனை நெடிய நீரையுடைய பொய்கையில் நடுயாமத்திலே தண்ணிதாய் நறுமணங் கமழும் புதிய மலரிலே சென்று தேனுண்ணும் வண்டு எனச் சொல்லுவனரல்லாமல்; நல்ல ஆண்மகன் என யாருங்கூறார்; ஆதலின் அவனைப் புலவாதே கொள்!;




பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை
நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற்பிரிய, வாயிலாய்ப் புக்க பாணன்
கேட்ப, தோழி சொல்லியதூஉம் ஆம்.

மதுரை மருதன் இளநாகனார்