ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 134. குறிஞ்சி

ADVERTISEMENTS

'இனிதின் இனிது தலைப்படும்' என்பது
இதுகொல்?- வாழி, தோழி!- காதலர்
வரு குறி செய்த வரையகச் சிறு தினைச்
செவ் வாய்ப் பாசினம் கடீஇயர், 'கொடிச்சி!
அவ் வாய்த் தட்டையொடு அவணை ஆக!' என,
ஏயள்மன் யாயும்; நுந்தை, 'வாழியர்,
அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்!
செல்லாயோ; நின் முள் எயிறு உண்கு' என,
மெல்லிய இனிய கூறலின், யான் அஃது
ஒல்லேன் போல உரையாடுவலே!
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


தோழீ! வாழ்வாயாக!; நம் காதலர் வருதற்குக் குறி செய்த மலையிடத்துள்ள சிறிய தினைப்புனத்தே விழுகின்ற சிவந்த வாயையுடைய பசுங்கிளியின் கூட்டங்களை ஓட்டும் பொருட்டு; என்னை நோக்கிக் "கொடிச்சீ! நீ அழகமைந்த கிளிகடி கருவியாகிய தட்டையைக் கைக்கொண்டு அத் தினைப் புனத்துக்குச் செல்வாயாக!" என்று அன்னையும் பல முறை மிகுதியாக ஏவினள்; அன்றியம் நுந்தை என்னைக் கூவி 'அழகிய மாந்தளிர் போன்ற மேனியையும் நிரைத்த வளையையும் உடைய இளமடந்தாய்!; 'நீ புனத்தின்கண்ணே சென்றிலையோ? விரைவிலே சென்று காண்! நின் முள் எயிற்றை முத்தங்கொள்வல்', என்று; மெல்லியவாகிய இனிய வார்த்தை கூறுதலினால்; யான் இன்னும் பலகால் நம்மை வேண்டி அவர்களே புனத்தின்கண்ணே கொண்டு சென்று காவலின் உய்க்குமாறு கருதி அங்ஙனம்¢ காவலுக்குச் செல்லமாட்டேன் போலச் சில வார்த்தையாடுவே னாயினேன்; ஆதலின் இனித் தினைக்கொல்லையிலே சென்று காதலனைக் கூடியிருப்பாம் என்பதற்கு அறிகுறி இதுதானோ! இங்ஙனம் நிகழ்ந்த இஃது இனிய வொரு பொருளினுங்காட்டில் இனியதாயிராநின்றது;

இற்செறிப்பார்' என ஆற்றாளாய தலைவியை, அஃது
இலர் என்பது பட, தோழி சொல்லியது.