ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 132. நெய்தல்

ADVERTISEMENTS

பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப்
பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி
போர் அமை கதவப் புரை தொறும் தூவ,
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப்
பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை
அயலும் மாண் சிறையதுவே; அதன்தலை,
'காப்புடை வாயில் போற்று, ஓ' என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்;
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே?
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


பெரிய இவ்வூரின்கணுள்ளார் யாருந் துயிலாநிற்பர், விழித்தியங்குபவர் ஒருவரும் இல்லை; இக்காலத்து நாம் அவரை யடையப் பெறாதபடி திருந்திய வாயையுடைய சுறாமீன் நீரைக் கக்குதலால் அந் நீர் விரைவிலே பெரிய தெருவின்கண் உதிர்கின்ற; மழையாக அம் மழையோடு பொருந்திய தண்ணிய காற்று தம்மின் ஒன்றோடொன்று பொருந்துதலமைந்த வாயிற்கதவிலுள்ள துளைகள்தோறும் அந் நீரைக் கொணர்ந்து தூவாநிற்ப; அத் தூவலாலே கூரிய பற்களையுடைய நாய்கள் நடுங்குகின்ற இவ்விராப்பொழுதில் நல்ல மாளிகையின்கண்ணே; துயிலுமாறு உயர்ந்த பலவாய மலர்களாலமைந்த படுக்கையின் பக்கத்திலும்; மாட்சிமைப்பட்ட சிறைப்படுத்திய காவலையுடைத்தாயிராநின்றது; அதன் மேலும் 'காவலையுடைய தலைக்கடை புழைக்கடை வாயில்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் ஓ!' என்று கூறாநின்ற; யாமந்தோறும் காவல் செய்தலை மேற்கொள்ளும் காவலரின் நெடிய நா அமைந்த ஒள்ளிய மணி ஒன்றுகின்ற தாளத்தில் மோதி எழுப்பும் ஒலி போல ஒலியாநிற்கும்; ஆதலின் யாவராலும் இரங்கத்தகுந்த யான் இறந்தொழியும் நாள் இன்று தானோ?

காப்பு மிகுதிக்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத்
தோழி சொல்லியது.