ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 54. நெய்தல்

ADVERTISEMENTS

வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ,
வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து-
கருங் கால் வெண் குருகு!- எனவ கேண்மதி:
பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை;
அது நீ அறியின், அன்புமார் உடையை;
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை
இற்றாங்கு உணர உரைமதி- தழையோர்
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணிப் புறம் தைவரும்
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே!
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


கரிய காலையுடைய வெளிய நாராய்! நீ நின் சுற்றம் முதலாயவற்றோடு சென்று வளைந்த நீர்ப்பரப்பிலுள்ள இரையை அருந்தித் தாவிப் பறந்து வருதலை விரும்பி¢னையாயினும், இரும்புலா அருந்தும் தூச் சிறை நின் கிளையொடு சிறிது இருந்து எனவ கேள்மதி மிக்க புலவைத் தின்னுகின்ற தூய சிறகுகளையுடைய நின் சுற்றத்தோடு சிறிது பொழுது ஈண்டுத் தங்கியிருந்து என்னுடைய சொற்களைக் கேட்பாயாக!; சிறிய புல்லிய மாலைப்பொழுதானது எனக்குப் பெரிய வருத்தஞ் செய்தலை உடையதாயிராநின்றது; அதனை நீ அறியின்; என்மாட்டுப் பெரிதும் அன்புடையையாதலால் வேறுபட்ட மனங்கொள்ளாமல்; என்குறை இத்தன்மையதென்று தழை யுடுப்பவர் கொய்தற்குரிய குழை தழைந்த இளைய ஞாழல் தௌ¤ந்த திரையின் புறத்தைத் தடவாநிற்கும் கண்டல் மர வேலிகளையுடைய நுங்கடற்றுறைச் சேர்ப்பனிடஞ் சென்று அவன் உணருமாறு உரைப்பாயாக !

காமம் மிக்க கழிபடர்கிளவி.

சேந்தங் கண்ணனார்