ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 278. நெய்தல்

ADVERTISEMENTS

படு காழ் நாறிய பராஅரைப் புன்னை,
அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ,
பொன்னின் அன்ன தாது படு பல் மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்
நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை
இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்-
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி
குளம்பினும் சேயிறா ஒடுங்கின;
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


அடுத்த மரலின் மொக்குகளைப்போலப் பொருந்திய வயிரம் விளங்கிய பருத்த அடியையுடைய புன்னையரும்புவாய் திறந்து மலராநிற்ப அங்ஙனம் மலர்ந்த பொன் போன்ற மகரந்தமிக்க பலவாகிய மலர்களில்; அணிந்து கொள்பவர் கொய்து தொடுத்தனபோக எஞ்சியன; கிளைகடோறும் நெய்மிக்க பசிய காயாகத் தூங்காநிற்கும்; கடற்றுறையுடைய தலைவனை; கழிக்கரையிலுள்ள சேறுபட்ட திரண்ட காலையுடைய அவனது தேரிலே பூட்டிய கோவேறு கழுதையின் குளம்பினெங்கும் சிவந்த இறாமீன்கள்¢ ஒடுங்கப்பட்டு அழிந்தன; அவனது மாலையிலும் மற்றெவற்றினும் காற்றால் எறியப்படும் வெளிய மணல் ஒடுங்கின ; ஆதலின் நினக்கே கணவனாமாறு விரைவில் வந்தனன் போலுமென்று இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்;




தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது.

உலோச்சனார்