ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 165. குறிஞ்சி

ADVERTISEMENTS

அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழிப் போக்கு நினைந்து, கானவன்,
'அணங்கொடு நின்றது மலை, வான் கொள்க' எனக்
கடவுள் ஓங்கு வரை பேண்மார், வேட்டு எழுந்து,
கிளையொடு மகிழும் குன்ற நாடன்
அடைதரும்தோறும், அருமை தனக்கு உரைப்ப,
'நப் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு
அன்ன ஆகுக' என்னான்;
ஒல்காது ஒழி; மிகப் பல்கின தூதே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


தோழீ! அமர்த்த கண்ணையுடைய ஆமானின் அரிய நெஞ்சிலே பாய்ந்து தங்காது குறிதவறி யொழிந்துபோன அம்பின் போக்கைக் கருதி; கானவன் தன்னுள்ளத்து 'இம் மலையில் தெய்வம் வெளிப்போந்து நின்றது, மழை பெய்தாலோ அதன் வீறு தணியுமாதலின் மலையை மழைவந்து சூழ்க' என்று; அக் கடவுளை உயர்ந்த அம் மலைமேலே சென்று வழிபடும் பொருட்டு விரும்பி யெழுந்து தன் சுற்றத்தாரொடும் போய்; அதற்குப் பலியிட்டு நீர்வளாவிய பின்னர் அப் பலியை உண்ணாநிற்கும் மலைநாட்டினையுடைய நந்தலைவன்; இங்கு வரும்பொழுதெல்லாம் நினது அருமையை அவனுக்கு உரைத்தலால்; 'நம்மைப் புணர்தலில்லாத அன்பற்றவரது நட்பு அப்படியே அன்பில்லாமல் ஒழிவதாக' என்று நீ வெறுத்துக் கூறுவதுபோல அவன் கூறுகின்றிலன்; ஆதலின் நின்பால் மிக்க அன்புடைமையின் இன்னே வரையுமாறு விரைய வாராநிற்பன்; அதன்முன் அன்னையர் என்னை வினவும் பொழுது நீ வருந்தாது என்பால் அறத்தொடு நிற்பாய் காண் !; அயலார் நின்னை மணஞ் செய்து கொள்ளுமாறு விடுக்கின்ற தூது மிகப் பலவாயின; வேற்று வரைவு நமக்குத் தகுதியன்று கண்டாய்;

நொதுமலர் வரையும் பருவத்து, தோழி தலைவிக்கு
அறத்தொடு நிலை பயப்பச் சொல்லியது; வரைவு மலிந்ததூஉம் ஆம்.