ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 284. பாலை

ADVERTISEMENTS

'புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்', நெஞ்சம்,
'செல்லல் தீர்கம்; செல்வாம்' என்னும்:
'செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத்தரும்' என,
உறுதி தூக்காத் தூங்கி, அறிவே,
'சிறிது நனி விரையல்' என்னும்: ஆயிடை,
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய்புரிப் பழங் கயிறு போல,
வீவதுகொல் என் வருந்திய உடம்பே?
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


என் நெஞ்சமானது புறத்தே தாழ்ந்து இருண்ட கூந்தலையும் நெய்தல் மலர் போன்ற நிறம் விளங்கிய ஈரிய இமைபொருந்திய மையுண்ட கண்ணையும் உடைய; என் உள்ளத்தைப் பிணித்துப் பற்றிக்கொண்டவளிடத்து யாம் செல்வோம், சென்று அவளுடைய இன்னாமையைத் தீர்ப்போம் என்று கூறாநிற்கும்; அப்பொழுது என் அறிவானது நாம் எடுத்த காரியத்தை முடிவுபெறப் போக்காமல் இடையில் இகழ்ந்து விட்டு விடுதலானது அறியாமையுடனே இகழ்ச்சியையும் கொடாநிற்கும் என; உறுதிப்பாட்டை ஆராய்கையாலே 'ஏ நெஞ்சமே! நீ நிலையிலே பொருந்தி நின்று சில பொழுதளவும் மிக விரையாதே கொள்' என்று கூறாநிற்கும்; அவ்விரண்டும் மாறுபடுதல் கொண்டமையின் அவற்றிடை நின்று வருந்துகின்ற என் உடம்பானது; விளங்கிய தலையிலே தாங்கிய கொம்பினையுடைய களிற்றியானை ஒன்றோடோன்று மாறாகப் பற்றி யீர்த்த தேய்ந்த புரியை உடைய பழைய கயிறு இற்றொழிவது போல; அழிய வேண்டுவது தானோ? இஃதொரு கொடுமை யிருந்தவாறு நன்று!;




பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச்
சொல்லியது.

தேய்புரிப் பழங்கயிற்றினார்