ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 31. நெய்தல்

ADVERTISEMENTS

மா இரும் பரப்பகம் துணிய நோக்கி,
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை
பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால்
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும்
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து,
யானும் இனையேன்- ஆயின், ஆனாது
வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்
நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு
உலவுத் திரை ஓதம் வெரூஉம்
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


தோழீ ! அமையாமல் வேறுவேறாகிய நாடுகளினின்றும் கலங்களைச் காற்றுச் செலுத்துதலாலே
வந்திறுத்த பலவகைப் பண்டங்கள் இறக்கியிட்ட நிலாவை ஒத்த மணற் பரப்பின் கண்ணுள்ள,
நெடுஞ்சினைப் புன்னைக் கடுஞ்சூல் வெண் குருகு நெடிய புன்னைக்கிளையிலிருக்கின்ற
முதிர்ந்த சூலையுடைய வெளிய குருகு; உலாவுதலையுடைய அலையோசைக்கு வெருவா நிற்கும்
வலிய நீர்ப்பரப்பினையுடைய கடற்சேர்ப்பனொடு மணவாத முன்பு; கரிய பெரிய நீர்பரந்த
கழியிடந் தௌ¤தலானே அதனை நோக்கி: சேஇறா எறிந்த சிறு வெள் காக்கை அதிலுள்ள செய்ய
இறாமீனைப் பற்றுதற்குப் பாய்ந்த கழுத்தளவு சிறிது வெண்மையுடைய நீர்க்காக்கை; பரவிய
பெரிய குளிர்ச்சியையுடைய கழியிடத்தைத் துழாவியெடுத்துத் தான் விரும்பிய பசிய
காலையுடைய பெடையை அழைத்து அதற்குக் கொடா நிற்கும்; சிறிய பூவையுடைய ஞாழலந்துறையும்
இனிதேயாயிருந்தது; அவன் என்னைக் கலந்து கைவிட்ட பின்பு அத்துறையும்
வெறுப்புடைத்தாயிற்று; ஆதலால் பெரிய வருத்தமுற்ற உள்ளத்தில் அவன் பிரிந்ததனால்
ஆகிய துன்பம் பலவற்றையும் நினைந்து யானும் இத்தன்மையே னாயினென்காண்;

தலைவன்சிறைப்புறத்தானாக, தலைவி வன்புறை
எதிர்அழிந்தது.

நக்கீரனார்