ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 197. பாலை

ADVERTISEMENTS

'தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலே
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே;
கண்ணும் தண் பனி வைகின; அன்னோ!
தௌந்தனம் மன்ற; தேயர் என் உயிர்' என,
ஆழல், வாழி- தோழி!- நீ; நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு,
வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய,
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல்
பொலந் தொடி போல மின்னி, கணங் கொள்
இன் இசை முரசின் இரங்கி, மன்னர்
எயில் ஊர் பல் தோல் போலச்
செல் மழை தவழும், அவர் நல் மலை நாட்டே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


தோழீ! தோள்கள் வளைகள் நெகிழ்ந்தன நெற்றி படர்ந்த பீர்க்க மலர் போலப் பசலை பரந்தது; கண்களும் தண்ணிய நீர் பெருகின; இவை இங்ஙனமாதல் திண்ணமாக எம் உயிர் இறந்தொழிதற் பொருட்டே என்பதனை யாம் நன்றாகத் தௌ¤ந்துகொண்டோம் என்று; அழாதே கொள்! இவ்விடரொழிந்து நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; நினது தாழந்து தழைந்த கூந்தல் போல இறங்கிய காலுடனே; வண்டுகள் பொருந்திய புதிய மலர்களை ஒள்ளிய நீர்த்துறையின்கண்ணே கொய்து கொணர்ந்த; பெரிய மடப்பத்தையுடைய மகளிரின் முன்கையிலணிந்த சிறிய கோற்றொழிலமைந்த பொன்னாலாகிய தொடிபோல மின்னி; கூட்டங்கொண்ட இனிய ஒலியையுடைய முரசுபோல முழங்கி; அரசர்களுடைய அரணாகிய மதில்மேலே பகைவருடைய படைசென்று பாயாதவாறு ஓம்பாநின்ற பலவாகிய கிடுகுபோல விசும்பிலே செல்லும் மேகம்; அவரது நல்ல மலை நாட்டின் கண்ணே தவழாநிற்கும்; அம்மழை நின் கூந்தல் போலிருத்தலானே அதனைக் காண்டலும் நின்னைக் கருதி இன்னே வருகுவர் காண்;

வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி
ஆற்றுவித்தது.

நக்கீரர்