ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 110. பாலை

ADVERTISEMENTS

பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி,
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்,
'உண்' என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென,
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்,
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே!
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


தேன் கலந்தாலொத்த நல்ல சுவையையுடைய இனிய வெளிய பாலுணவை விரிந்த ஒளியையுடைய பொன்னாலாகிய கலத்திலிட்டு அதனை ஒரு கையிலேந்தி நின்று; புடைப்பாகச் சுற்றிய பூவொத்த மெல்லிய நுனியையுடைய சிறிய கோலை ஓச்சி நீ உண்ணுவாய் என்று எறிதலும்; தௌ¤ந்த ஒளியையுடைய முத்துக்களை உள்ளே பரலாகப் போடப்பட்ட பொன்னாலாகிய சிலம்பு ஒலிக்குமாறு பாய்ந்து; மெல்லியவாய நரைத்த கூந்தலையுடைய செவ்விய முதுமையடைந்த செவிலியர் பின்தொடர்ந்து பற்ற முடியாமல் மெலிந்தொழியுமாறு தான் முன்றிலின்கணுள்ள பந்தரின் கீழோடி 'நீ உண்ணுவாய்' என்றதன் விடையாக; யான் உண்ணேன் காண்!" என்று மறுத்து உரையாடும் சிறிய விளையாட்டினையுடைய என் மகள்; நல்ல அறிவும் ஆசாரமும் எப்படி உணர்ந்தனளோ? கொண்டகொழுநன் குடி வறன் உற்றென கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் தன்கை பற்றிய கொழுநன் குடி வறுமையுற்றதாகத் தன்னை ஈன்றுதவிய தந்தையினது செல்வமிக்க உணவை நினைகிலளாகி; ஓடுகின்ற நீரிலே இடையீடுற்றுக் கிடக்கும் நுண்ணிய மணல் போல ஒரு பொழுதின்றி யொருபொழுதுண்ணும் சிறிய வன்மையுடையளாயினாளே, இஃதென்ன வியப்பு; ம்.) அரி பருக்கைக்கல். அரிநரை மெல்லியநரை. பரிதல் ஓடுதல்.

உவகைக் கலுழ்ச்சி. பயன் ஆற்றாமை நீங்குதல். இஃது உரிப் பொருளாற் பாலை.


உவகை. பயன் மகிழ்தல்.(பெரு ரை.) பிரசம் தேன். தேன் கலந்த சுவைமிக்க வெளிய இனிய பால் எனலே சாலும். தேன் கலந்தா லொத்த எனல் வேண்டா கூறலாம். புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் என்பதற்குப் புடைத்துழிப் புடைக்கப்படுவோரைச் சுற்றிக்கொள்ளும் இயல்பு;

மனைமருட்சி; மகள்நிலை உரைத்ததூஉம்
ஆம்.

போதனார்