ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 118. பாலை

ADVERTISEMENTS

அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்,
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்,
'அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர்' என,
இணர் உறுபு, உடைவதன்தலையும் புணர்வினை
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி,
புது மலர் தெருவுதொறு நுவலும்
நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே!
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


யாற்றை அடுத்த கரையின்கணுள்ள மாமரங்கள் நெருங்கிய கிளையெல்லாம் தழையும்படி தளிர் ஈன்று அழகமைந்த தண்ணிய நறிய சோலையின்கண்ணே; சேவலுடனே பொருந்திய சிவந்த கண்ணையுடைய கரிய குயில் ஒன்றனை ஒன்று விரும்பி எதிரெதிரிருந்து ஆரவாரிக்கும்; பூங்கொத்தினையுற்று மலர்கள் மலரும் இளவேனிற்காலத்தும்; முன்பு பிரிந்தகன்ற காதலர் திண்ணமாக நம்மை மறந்தனர் என வருத்தமுறுவதன் மேலும்; தம் தொழிலில் வல்ல ஓவியர் ஒள்ளிய அரக்கினையூட்டிய எழுதுகோல்போன்ற தலையில் நுண்ணிய பஞ்சினையுடைய பாதிரியின் வெளிய இதழையுடைய மலர்களை; வண்டுகள் மொய்க்கும்படி வட்டியிலேந்தி அப்புதிய மலரைத் தெருவுகள் தோறும் விலைகூறிச் செல்லாநின்ற ஏதிலாட்டியாகிய பூவிலைமடந்தையை நோக்குந்தோறும் என்னெஞ்சு நோவாநின்றது; ஆதலின் யான் இனி எவ்வண்ணம் ஆற்றியுளேனாவேன் ?

பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது.

பாலை
பாடிய பெருங்கடுங்கோ