ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 291. நெய்தல்

ADVERTISEMENTS

நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்
நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு
குப்பை வெண் மணல் ஏறி, அரைசர்
ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்,
தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும்,
கண்டாங்கு உரையாய்; கொண்மோ- பாண!-
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து,
எல்லித் தரீஇய இன நிரைப்
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே?
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


பாணனே! மிக்க பெரிய முள்ளூர் மன்னவனாகிய மலையமான் திருமுடிக்காரி¢ பரியேறிச் சென்று; இராப் பொழுதில் அடித்துக் கொண்டு வரப்பட்ட கூட்டமாகிய பலவாய பசுவினிரைக்குரியவர் அவனோடெதிர்நின்று போர்முனையில் அழிந்தாற்போல; அழிந்து போகிய இவளது நலத்தை; நீ கண் கூடாகக் கண்டபடி; நீர் தன்னிலையிலிருந்து ஓடி வற்றிய அள்ளற் சேற்றின்கணுள்ள; நிணமிக்க தலையையுடைய கொழுத்த மீனை அருந்த வேண்டி நாரையினம்; குவிந்த வெளிய மணல்மேட்டில் ஏறியிருந்து; அரசரது ஒள்ளிய காலாட்படையின் கூட்டம்போல விளங்கித் தோன்றாநிற்கும்; தண்ணிய பெரிய கடனீர்த்துறையை உடைய காதலனுக்கு; உரைத்தாய் இல்லையே! அங்ஙனம் கூறாதது நினக்கு இயல்பாகுமோ? கூறியிருந்தால் முன்னரே அவன்வந்து கூடித் தலையளி செய்திருப்பன்; நீ உள்ளவாறு கூறாமையின் அவனும் வந்திலன்; இவளது நலனும் அழிந்ததுகாண்!;




வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது
குறிப்பு அறிந்து, நெருங்கிச் சொல்லி யது.

கபிலர்