ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 58. நெய்தல்

ADVERTISEMENTS

பெரு முது செல்வர் பொன்னுடைப்புதல்வர்
சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல,
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர்மாதோ-
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப,
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து,
அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை
நீடு நீர்ப் பனித் துறைச் சேர்ப்பன்
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே!
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


'உறையூரின்' கண் அரசாண்ட, வீரைவேண்மான் வெளியன் என்னும் தித்தனுடைய முரசு முதலியவற்றோடு வெளிய சங்குகள் ஒலியாநிற்பச் சிறிய பனியுண்டாக வரிசையாக எடுக்கப்பட்ட விளக்குகளுடனே; சென்று எதிர் கொள்ளுகின்ற பிரிந்துறை மகளிர் செயலறும்படி வந்த மாலைப்பொழுதிலே; மெய் சோர்ந்து வருந்திய மனத்தேமாகிப் பெயர்ந்து போகும்வண்ணம்; ஓங்கி யெழுகின்ற அலைகளையுடைய நீண்ட நீர்வடிவாகிய கடலின் குளிர்ந்த துறையையுடைய சேர்ப்பனது, ஓடு தேர் நுண் நுகம் நுழைத்த மா ஓடுகின்ற தேரின் நுண்ணிய நுகத்திற் பூட்டப்பட்டுச்¢ செல்லுகின்ற குதிரைகள் தாம்; முற்செய்த தவத்தாற் பெற்ற முதிர்ந்த செல்வரின் பொன்னணிகளையுடைய புதல்வர்; சிறிய தோளில் மாட்டிய செவ்விதின் ஒலிக்கும் பறையின் கண்ணில் எழுதிய குருவி அடி படுதல் போல; கோலைக் கொண்டு அடிக்க அதனாலே துன்பப்படுவனவாக
!;

பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு
நோக்கி, தோழி மாவின்மேல்வைத்துச் சொல்லியது.

முதுகூற்றனார்