ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 49. நெய்தல்

ADVERTISEMENTS

படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே;
முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப்
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே;
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து,
எமரும் அல்கினர்; 'ஏமார்ந்தனம்' எனச்
சென்று நாம் அறியின், எவனோ- தோழி!
மன்றப் புன்னை மாச் சினை நறு வீ
முன்றில் தாழையொடு கமழும்
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே?
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


தோழீ ! பரதவர் முனறிலின்கணுள்ள பலர் கூடுகின்ற மன்றம் போல் அமைந்த புன்னையின் கரிய கிளைகளிலுள்ள நறிய மலர் அயலிலுள்ள தாழை மடலோடு கூடி நறுமணம் வீசாநிற்கும் தௌ¤ந்த கடற்றுறைவன; வாழ்கின்ற சிறிய நல்ல ஊரின்கட் சென்று; அவன்பால் கடலிலுள்ள பெரிய அலைகளாலே கொழிக்கப்பட்ட பால் போலும் வெளிய நிறத்தையுடைய எக்கராகிய மணல் மேட்டில் விளையாட்டயரும் வளையுடைக் கையராய பரத்தியர் யாவரும் தத்தம் மனையகத்துத் துயில்கின்றமையாலே துறை தனிமையுடையதாயிராநின்றது; முடியிட்ட வலையால் முகக்கப்பட்ட முடங்குதலையுடைய பாவை போன்ற இறாமீன்களைக் காயவிட்டு அவற்றில் வந்து விழுகின்ற காக்கைகளை ஓப்புதலானே பகற்பொழுது கழிந்துவிட்டது; எம்முடைய ஐயன்மாரும் திரண்ட கோடுகளையுடைய சுறா முதலிய மீன்களைப் பிடித்தலானாகிய உவகையராய்ப் பின்னும் வேட்டைமேற் செல்லாதொழித்துத் தம்தம் மனையகத்தே தங்கிவிட்டனர்காண்; யாமும் நீ இல்லாமையால் மயக்கமுடையேமாய் இராநின்றேம் என்று கூறி அவன் கருத்தை ஆராய்ந்தறியின்; அதனா லேதேனும் குற்றப்பாடுளதோ? உளதாயிற் கூறிக்காண்;

தோழி, தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது;
சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம்.

நெய்தல் தத்தனார்