ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 287. நெய்தல்

ADVERTISEMENTS

'விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி,
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த;
நல் எயிலுடையோர் உடையம்' என்னும்
பெருந் தகை மறவன் போல- கொடுங் கழிப்
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன்,
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்,
காமம் பெருமையின், வந்த ஞான்றை-
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும்,
'தேர் மணித் தௌ இசைகொல்?' என,
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


வளைந்த கழியின் கண்ணே பசிய இலைகளையுடைய நெய்தன்மிக்க குளிர்ந்த நீரையுடைய கொண்கன்; அச்சஞ் செய்கின்ற முதலையின் நடுக்க முறுத்தும் பகைமைக்கும் அஞ்சானாகிக் காம மிகுதியால் இங்கு வந்தபொழுது; விசும்பிலே நீண்டுயர்ந்த மதிலை உள்ளிருப்பவர் நடுங்கும்படி முற்றுகை செய்து பசிய கண்ணையுடைய யானைப் படையொடு பகையரசன் அதன் புறத்தே தங்கப் பெற்றதனால்; அப் பகையரசனை உள்ளே புகுதவிடாதபடி நல்ல மதில்காவலுடையாரை யாம் பெற்றுடையோமென்று கருதியிருக்கின்ற பெருந்தன்மையுடைய உள்ளடைப்பட்டிருந்த வீரனைப்போல; கெடாத வன்கண்மையுடைய என்னெஞ்சமானது இப்பொழுது; செறிந்த இருளையுடைய நடுயாமத்திலே பறவையொலிப்பதைக் கேட்குந்தோறும்; நங்காதலன் ஊர்ந்து வருகின்ற தேரிலே கட்டிய மணியின் தௌ¤ந்த ஓசையோ? என்று; ஊராரெல்லாரும் உறங்குகின்ற இராப்பொழுதினும் துயில் கொள்வதனை மறந்துளதாயிரா நின்றது;




காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள்
சொல்லியது.

உலோச்சனார்