ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 262. பாலை

ADVERTISEMENTS

தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்,
ஆடு மயிற் பீலியின் வாடையொடு துயல்வர,
உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து,
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்,
துனி கூர் மனத்தள், முனி படர் உழக்கும்
பணைத் தோள், அரும்பிய சுணங்கின், கணைக் கால்,
குவளை நாறும் கூந்தல், தேமொழி
இவளின் தீர்ந்தும், ஆள்வினை வலிப்ப,
'பிரிவல்' நெஞ்சு, என்னும்ஆயின்,
அரிது மன்றம்ம, இன்மையது இளிவே.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


ஈரிய புனத்திலுள்ள கருங்காக்கணத்தின் கண்போன்ற கரிய மலர; வாடைக்காற்று வீசுதலானே கூத்தாடுகின்ற மயிலின் பீலிபோல ஆடாநிற்ப; விடாது மழைத்தூவல் பொருந்திய ஊர் முழுதும் உறங்கும் நடுயாமத்து; நடுங்குகின்ற காமநோய் வருத்தஞ் செய்தலாலே நல்ல அழகு குறைந்து; துன்பமிக்க மனத்தளாய்த் தன்னை முனிந்தொறுக்கும் காமநோயால் உழக்(கப்படு)கின்ற; பருத்த தோளையும் வெளிப்படத் தோன்றிய தேமலையும் திரண்ட தண்டையுடைய குவளைமலர் மணம் வீசுங்கூந்தலையும் இனிய சொல்லையுமுடைய இவளை; கைவிட்டும் பொருளின் முயற்சி என்னெஞ்சினை இழுத்தலால்; என்னெஞ்சு 'யான் இவளைப் பிரிகிற்பேன்' என்று கூறாநிற்கும்; அங்ஙனம் கூறுமானால் வறுமையான் வரும் இளிவரவு அம்ம திண்ணமாக மிகக் கொடியதேயாம்;




தலைமகள் ஆற்றாக் குறிப்பு அறிந்து, பிரிவிடை
விலக்கியது.

பெருந்தலைச் சாத்தனார்