ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நற்றிணை - 63. நெய்தல்

ADVERTISEMENTS

உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்,
கல்லென் சேரிப் புலவற் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்
அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால்,
அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப,
பசலை ஆகி விளிவதுகொல்லோ-
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்
கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி
திரை தரு புணரியின் கழூஉம்
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே?
ADVERTISEMENTS
ADVERTISEMENTS


வலிமையுடைய கடலிலே சென்று மீன் பிடித்தலில் வருந்திய பெரிய வலைகளையுடைய பரதவர்; மிக்க மீன்களைக் காயப் போகட்ட புதிய மணற் பரப்பாகிய அவ்விடத்து; கல்லென வொலிக்குஞ் சேரியை யடுத்த புலவு நாற்றத்திடத்துள்ள புன்னையின்; விழாவுக்குரிய மணமுடைய விளங்கிய பூங்கொத்து ஒருசேர விரிந்து மணங் கமழா நிற்கும் அலரெடுக்கின்ற பேரொலியையுடைய இவ்வூரோவெனில்; அறமுடையதில்லை; அதனால் புட்கள் வந்திருத்தலா லுதிர்ந்த பூக்கலந்த சேற்றினையுடைய கழியாகிய இடத்தின் மீதோடும் தேரிற் பூட்டிய பெரிய பிணிப்பையுடைய குதிரைகள்; அலையெழுந்து வரும் கடனீராலே கழுவப்படுகின்ற மிக்க கடற் சேர்ப்பனொடு பொருந்திய நமது தொடர்ச்சியானது; அறனில்லாத அன்னை இற்செறித்து


அரிய காவலிற் படுத்தலாலே இங்ஙனம் பசலையாகி விளிந்தொழியக் கடவதுதானோ?

அலர் அச்சத்தால்தோழி சிறைப்புறமாகச் செறிப்பு
அறிவுறீஇயது.

உலோச்சனார்